டெங்குவுக்கு நிகரான பசியின்மை நோய் ! அடுத்தடுத்து 5 பெண்கள் உயிரிழந்த பரிதாபம் ! மருத்துவமனை மீது புகார் !

 

டெங்குவுக்கு நிகரான பசியின்மை நோய் ! அடுத்தடுத்து 5 பெண்கள் உயிரிழந்த பரிதாபம் ! மருத்துவமனை மீது புகார் !

2012ல் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரிட்டனில் மருத்துவர்கள் பசியின்மை நோயை கண்டறிய தாமதப்படுத்தியதால்  5 பெண்களின் உயிர்கள் பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2012ல் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் அவெரில் ஹார்ட். அவரை கேம்பிரிட்ஜ் மற்றும் பீட்டர்பாரோவ் என்எச்எஸ் பவுண்டேஷன் டிரஸ்ட் கண்காணித்து வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் இறந்த பிறகு வந்த பரிசோதனை அறிக்கையில் பசியின்மை நோயால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது.

suicide

இதற்கு அடுத்த படியாக 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் மர்ம நோயால் அடுத்தடுத்து 4 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரழந்தர். இவர்களின் ரத்த பரிசோதனை அறிக்கையிலும் பசியின்மை நோயால் உயிரிழந்ததாக மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

நோயாளிகளை பற்றி கலைப்படாமல் ஆடன்ப்ரூக் மருத்துவமனை மருத்துவர்கள் நோய் பாதிப்புக்கான காரணத்தை நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால் பெண்கள் உயிரிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2012ல் அவெரில் ஹார்ட் உயிரிழந்தபோதும் மருத்துவமனை நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்ததாகவும் தற்போதும் மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருப்பதாகவும் அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர்.

 

பசியின்மை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான கட்டமைப்பு இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பசியின்மை நோயை கண்டறியவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததே 5 பெண்கள் உயிரிழக்கக் காரணம் என கூறப்படுகிறது.