டெங்குவால் தமிழகத்தில் முற்றிலும் பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

 

டெங்குவால் தமிழகத்தில் முற்றிலும் பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

அனைத்து கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து மக்களின் நலனை காப்பதில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிபடையில் டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிப்படையாத நிலை உருவாகியுள்ளது

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் நோயால்  யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையை ஒட்டியுள்ள கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ” டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை, மாவட்டம் ரீதியாக  தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டதின் கீழ் இதுவரை பலர் பலன் பெற்றுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து மக்களின் நலனை காப்பதில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிபடையில் டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிப்படையாத நிலை உருவாகியுள்ளது” என்று கூறினார்.சிறப்பு மருத்துவ முகாம்

தொடர்ந்து பேசிய அவர் ” நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றியை ஈட்டும். இந்தத் தேர்தலுக்கு தங்கள் கட்சி அயராது உழைத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அண்மையில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சேர்ந்து டெங்கு மற்றும் தோற்று நோயை தடுக்க ஆய்வு கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.