டெக் மகிந்திரா லாபம் ரூ.804 கோடியாக குறைந்தது… இறுதி டிவிடெண்டாக ரூ.5 அறிவிப்பு

 

டெக் மகிந்திரா லாபம் ரூ.804 கோடியாக குறைந்தது… இறுதி டிவிடெண்டாக ரூ.5 அறிவிப்பு

டெக் மகிந்திரா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.804 கோடி ஈட்டியுள்ளது. 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் இது 29 சதவீதம் குறைவாகும்.

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் ஒன்றான டெக் மகிந்திரா தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம் அந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.804 கோடி ஈட்டியுள்ளது. 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் இது 29.1 சதவீதம் குறைவாகும். 2019 டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிட்டால் கடந்த காலாண்டில் டெக் மகிந்திரா லாபம் 30 சதவீதம் குறைவாகும்.

பணம்

2020 மார்ச் காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் வருவாய் 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.9,490 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் 2019 டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிட்டால் வருவாய் 1.7 சதவீதம் குறைந்துள்ளது. கடநத மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் பணியாளர்களின் எண்ணிக்கை 4,100 அதிகமாகும்.

டெக் மகிந்திரா

அடுத்த 6 மாதங்களுக்கு சம்பள உயர்வை நிறுத்தி வைக்க டெக் மகிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு உட்பட்டு, சென்ற நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.5ஐ இயக்குனர்கள் குழு அறிவித்துள்ளது.