டூ வீலர், 4 வீலர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்! பெட்ரோல் பங்கு தேடி அலைய வேண்டாம் பக்கத்துல இருக்கிற சூப்பர்மார்க்கெட் போனா போதும்!

 

டூ வீலர், 4 வீலர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்! பெட்ரோல் பங்கு தேடி அலைய வேண்டாம் பக்கத்துல இருக்கிற சூப்பர்மார்க்கெட் போனா போதும்!

சூப்பர் மார்க்கெட்டுகளில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. அதனால் வெகுவிரைவில் நாம  பைக், காருக்கு பெட்ரோல், டீசலை சூப்பர் மார்க்கெட்ல நிரப்பிகலாம்!

சூப்பர் மார்க்கெட்டுகளில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. அதனால் வெகுவிரைவில் நாம  பைக், காருக்கு பெட்ரோல், டீசலை சூப்பர் மார்க்கெட்ல நிரப்பிகலாம்!

petrol

வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கன்னு சொன்னா அதை யாரும் கேட்டமாதிரி தெரியல. ஆனால் இப்பம் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு டூ வீலராவது இருக்கு. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய் (லிட்டருக்கு) ஆனாலும் திட்டிகிட்டை போடுவாங்களே தவிர பஸ்சுல போக தயாராக இல்லை. நம்ம வண்டிக்கு பெட்ரோல் கிடைச்சா போதும்ன்னு மனநிலையில்தான் வாகன ஓட்டிகள் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசும் அதிக அளவில் பெட்ரோல் பங்குகளை திறக்க உரிமம் வழங்கியது.

petrol

பெட்ரோல் பங்குகள்

முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது  பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனாலும் இது போதுமா என்று கேட்டால் போதாது என்பதுதான் உண்மை. பல நேரங்களில் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து  நிற்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்பட பல்வேறு இடையூறு ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்வு காணலாம் என்று ரூம் போட்டு யோசித்த மத்திய அரசுக்கு ஒரு ஐடியா கிடைத்தது. கடைகளில் எண்ணெய் விற்பனை செய்வது மாதிரி பெட்ரோல், டீசலை விற்பனை செய்தால் இப்படி இருக்கும். மக்களும் பக்கத்திலேயே தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி கொள்ளலாம். நாமும் நம்ம கஜானாவை நிரப்பி கொள்ளலாம் என்ற யோசனை அரசுக்கு உதித்தது.

supermarket

நினைச்ச உடனேயே சூப்பர்மார்க்கெட்ல பெட்ரோல், டீசலை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்து விட முடியாது. அதற்கு முன்னால சில சட்டப்பூர்வமாக சில காரியங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக பெட்ரோல், டீசல் விற்பனைக்கான விதிமுறைகளை தளர்த்தி அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

petrol

100 நாளில்

மத்தியில் இரண்டாவது முறையாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் 100 நாள் ஆட்சி காலத்துக்குள், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பங்குகளை தேடி ஓட வேண்டிய அவசியம் இன்னும் கொஞ்சம் நாளில் மறைந்து விடும். பக்கத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்பி கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.