டூ வீலர் ஓட்டி முதுகு வலிக்குதா…இதைச் செய்து சாப்பிடுங்க…

 

டூ வீலர் ஓட்டி முதுகு வலிக்குதா…இதைச் செய்து சாப்பிடுங்க…

கோடை வெயில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் சதத்தை எட்டியது என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருந்த நம்மில் எத்தனைப் பேர், இந்தக் கோடையில் கேழ்வரகு கூழையும், கம்பங்கூழையும் ருசித்து சாப்பிட்டீர்கள்

கோடை வெயில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் சதத்தை எட்டியது என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருந்த நம்மில் எத்தனைப் பேர், இந்தக் கோடையில் கேழ்வரகு கூழையும், கம்பங்கூழையும் ருசித்து சாப்பிட்டீர்கள். முன்னொரு காலத்தில் நாம் சாப்பிட்டு வந்த உணவு பழக்கத்தை, அரத பழசு என்று கைவிட்டு, டிபன் வெரைட்டிக்கு மாறினோம். தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் சமைக்கப்படுகிற இட்லி, தோசை, பூரி வகையறாக்களைத் தினந்தோறும் சாப்பிட்டு உடல் நலத்தைக் காப்பதில் கோட்டை விட்டோம். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் திணை மாவு, பழைய சோறு என்று டாலர்களில் வசூலித்து நமது பாரம்பரிய உணவுகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கம்பு,வரகு, சாமை, திணை போன்ற சிறு தானியங்களைச் சாப்பிட்டுத்தான் நம் மூதாதையர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்தார்கள். சிறு தானியங்களைச் சாப்பிடுவதால் உடல் அசதி நீங்கும். தளர்ச்சி நீங்கி சுறுசுறுப்பு வரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதை தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக டூவீலரில் அடிக்கடி பயணம் செய்வர்கள் சிறு தானிய உணவு வகைகளைச் சாப்பிடுவதால், வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.
சாமை திணை அரிசி அடை சமையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 சிறு தானியங்கள்

தேவையானப் பொருட்கள்
சாமை திணை அரிசி தலா 100கி
சின்னவெங்காயம் 50கி
தக்காளி 1
மிளகு 20
சீரகம் ஒரு டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
சிறியபூண்டு-6பல்
மஞ்சள் தூள் –அரை டீஸ்பூன்
கறுப்பு உளுந்து-2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்- தேவைக்கு
உப்பு- தேவைக்கு
சாமை,திணை,மிளகு,உளுந்து,மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து தூள் செய்து கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை நன்றாக வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மாவுடன் கலந்து உப்பு சேர்த்து பிசையவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்கவேண்டும்.
இந்த அடை சாப்பிட ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.