டூயல் ஸ்க்ரீன்.. ஃபிளிப் ஸ்டைல்.. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்!! வெளியாவது எப்போது?

டூயல் ஸ்க்ரீன்.. ஃபிளிப் ஸ்டைல்.. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்!! வெளியாவது எப்போது?

டூயல் ஸ்க்ரீன் மற்றும் ஃபிளிப் ஸ்டைல் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் ஆவதை சீனா டெலிகாம் துறை உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் டபுள்யூ 2019 ஸ்மார்ட்போன் டூயல் ஸ்க்ரீன் மற்றும் ஃபிளிப் ஸ்டைல் வசதியுடன் வெளியிடப்பட்டது. இதன் அப்க்ரேடட் வெர்சனாக தற்போது டபுள்யூ20 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் வெளிவர இருக்கிறது.

samsung

இதில் முன்னர் வந்த வெர்சனை விட பலமடங்கு அதிவேக செயல்திறன் மற்றும் பிரத்தியேக கேமரா வசதிகள் என அடுத்த தலைமுறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை டூயல் ஸ்க்ரீனில் மேலும் பல வசதிகள் கொடும்க்கப்பட்டுள்ளதாகவும், முன்பைவிட பயனாளர்களை கவரும் விதமாக இருக்கும் எனவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சீனாவில் நிகழ்ந்த டெவலப்பர் நிகழ்ச்சியில், இந்த வகை ஸ்மார்ட்போன் காட்சிக்கு வைக்கப்பட்டது. பலரின் கவனத்தை ஈர்த்ததால், விரைவில் வெளியிட சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

samsung

5ஜி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் வெளியிட சாம்சங் முடிவு செய்தது. தற்போது சீன டெலிகாம் துறையும் இதனை உறுதி செய்து பிரத்தியேக செய்தியை வெளியிட்டிருக்கிறது. 

அநேகமாக, நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிட சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

-vicky