டூயல் கேமரா, ஏ.ஐ. வசதி கொண்ட விவோ ஒய்93 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

டூயல் கேமரா, ஏ.ஐ. வசதி கொண்ட விவோ ஒய்93 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் ஒய்93 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் விவோ நிறுவனத்தின் ஒய்93 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் ஒய் சீரிசில் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது விவோ ஒய்93 ஸ்மார்ட்போன் ஆகும். இதில் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

விவோ ஒய்93 சிறப்பம்சங்கள்:

– 6.22 இன்ச் 720×1580 பிக்சல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்

மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் பிராசஸர்

– 4 ஜி.பி. ரேம்

– 32 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– 13 எம்.பி. பிரைமரி கேமரா

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, PDAF, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட்

– 8 எம்.பி. செல்ஃபி கேமரா

ஃபேஸ் அன்லாக்

– 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி. வசதி

ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 4.5

இந்தியாவில் விவோ ஒய்93 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கும் விவோ ஒய்93 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் கிடைக்கிறது.