டூத் பேஸ்ட் விற்பனையில் ரூ.199 கோடி லாபம் பார்த்த கோல்கேட் பாமோலிவ்……

 

டூத் பேஸ்ட் விற்பனையில் ரூ.199 கோடி லாபம் பார்த்த கோல்கேட் பாமோலிவ்……

கோல்கேட் பாமோலிவ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.199.1 கோடி ஈட்டியுள்ளது.

பிரபலமான டூத் பேஸ்ட், ஷேவிங் கிரீம் உள்ளிட்ட நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான கோல்கேட் பாமோலிவ் (இந்தியா) தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2019 டிசம்பர் காலாண்டில் கோல்கேட் பாமோலிவ் நிகர லாபமாக ரூ.199.1 கோடி ஈட்டியுள்ளது. இது 2018 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 3.64 சதவீதம் அதிகமாகும்.

கோல்கேட் பாமோலிவ்

2018 டிசம்பர் காலாண்டில் கோல்கேட் பாமோலிவ் நிகர லாபமாக ரூ.192.1 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. கடந்த 2019 டிசம்பர் காலாண்டில் கோல்கேட் பாமோலிவ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 4.13 சதவீதம் அதிகரித்து ரூ.1,152.97 கோடியாக உயர்ந்துள்ளது.

கோல்கேட்

கடந்த டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் மட்டும் கோல்கேட் பாமோலிவ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.612.30 கோடி ஈட்டியுள்ளது. அதேசமயம், அந்நிறுவனத்தின் நிகர வருவாய் 4.2 சதவீதம் அதிகரித்து ரூ.3,425.2 கோடியாக உயர்ந்துள்ளது.