டுயல் ரியர் கேமரா, 5000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ‘ரியல்மி சி3’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

டுயல் ரியர் கேமரா, 5000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ‘ரியல்மி சி3’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களாக டுயல் ரியர் கேமரா, 5000 எம்.ஏ.எச் பேட்டரி, வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசசர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.6,999 எனவும், 4 ஜிபி ரேம், 64 மெமரி மாடல் விலை ரூ.7,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் ஃபிளிப்கார்ட், ரியல்மி.காம், ரியல்மி பார்ட்னர்ஷிப் வைத்துள்ள ஆஃப்லைன் ஷோரூம்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

raelme

மேலும் இதன் சிறப்பம்சங்களாக டுயல் சிம், டுயல் ரியர் கேமரா, 5000 எம்.ஏ.எச் பேட்டரி, வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசசர், 4 ஜிபி ரேம்+64 மெமரி மாடல், 3 ஜிபி ரேம்+32 ஜிபி மெமரி மாடல், ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாக கொண்ட யு.ஐ, 6.5 இன்ச் எச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 12 எம்.பி + 2 எம்.பி இரட்டை ரியர் கேமரா, 5 எம்.பி செல்பி கேமரா, வைஃபை, வோல்ட்இ, ப்ளூடூத், ஜி.பி.எஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ப்ளாசிங் ரெட் மற்றும் ஃப்ரோஸன் ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.