டுயல் கேமரா செட்டப் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

 

டுயல் கேமரா செட்டப் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

டுயல் கேமரா செட்டப் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பெய்ஜிங்: டுயல் கேமரா செட்டப் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹூவாயின் துணை நிறுவனமான ஹானர் அதன் முன்னணி தயாரிப்பான ஹானர் 10 ஸ்மார்ட்போனை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மே மாதம் விற்பனைக்கு வந்தது. இப்போது அதில் சில மாறுதல்களை செய்து ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனை இந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி சீனாவில் வெளியிடப்போவதாக ஹானர் அறிவித்துள்ளது.

honor

அந்த தேதியில் பெய்ஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஹூவாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அப்போது ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் தேதி குறித்து அறிவிக்கப்படும். இந்நிலையில், அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசர் போஸ்டரில் போனின் பின்புறத்திலிருக்கும் முக்கியம்சத்தை காட்டியுள்ளது. அது ஹானர் 10 உடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது.

இந்த ஸ்மார்ட்போனில் ஒன்றின் கீழ் ஒன்றாக இரு கேமிராக்கள் அமைந்துள்ளது. பின்புற விரல்ரேகை சென்சார் மற்றும் இரட்டை நிறத்திலான பின்புறத்தை கொண்டுள்ளது. ஹானர் 10 லைட் போஸ்டரில் போனின் முன்புற தோற்றம் காட்டப்படவில்லை இதனால் ஹானர் 10 லைட்டில் டிஸ்பிளே நாட்ச் இருக்கிறதா என்று தெரியவில்லை.