டீ விற்கும் முதியவர் மனைவியுடன் 23 நாடுகளை சுற்றி பார்த்த சுவாரஸ்யம்: வியக்க வைக்கும் உண்மை!

 

டீ விற்கும் முதியவர் மனைவியுடன் 23 நாடுகளை சுற்றி பார்த்த சுவாரஸ்யம்: வியக்க வைக்கும் உண்மை!

டீ விற்கும் முதியவர், தினமும் தனக்கு கிடைக்கும் வருமானத்தைச் சேர்த்து வைத்து, தன் மனைவியுடன், 23 நாடுகளைச் சுற்றி பார்த்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி:  டீ விற்கும் முதியவர், தினமும் தனக்கு கிடைக்கும் வருமானத்தைச் சேர்த்து வைத்து, தன் மனைவியுடன், 23 நாடுகளைச் சுற்றி பார்த்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் விஜயன்(70). தன்  16 வது வயதில் டீ விற்பனையைத் துவங்கியுள்ள  இவருக்கு உலக நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதை அடுத்து, தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு தொகையைச் சேர்த்து வைத்துள்ளார். இதையடுத்து தனக்கு திருமணம் ஆனதும், தன் ஆசை குறித்து மனைவியிடம் தெரிவித்தார். இதனால் கணவரின் ஆசையை நிறைவேற்ற அவரது மனைவியும் டீ விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கணவனும் மனைவியும் இணைந்து கிடைக்கும் வருமானத்தில்,  தினமும் குறைந்த பட்சம், 300 ரூபாயைச் சேர்த்து வைக்க துவங்கினர். ஆண்டு இறுதியில், தங்களிடம் சேர்ந்த பணத்திற்கு ஏற்ப, ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

couple

அந்த வகையில், இதுவரை இருவரும் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட, 23 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களைப் பற்றி தகவலறிந்த, மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா, இந்த தம்பதியை பாராட்டியுள்ளதோடு, தான் கேரளா செல்லும் போது அவர்களைச் சந்திக்க விரும்புவதாகவும்  டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.