‘டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும்’ : டீக்கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு!

 

‘டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும்’ : டீக்கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு!

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. கேரளா, தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வைரஸ் பரவியுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். கொரோனா பரவிய எல்லா மாநிலங்களிலும் பள்ளி, வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

அதே போலத் தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு எல்லையோர மாவட்டங்களில் உள்ள அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் இடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ttn

அவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல கொரோனா அறிகுறி இருப்பவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க சுகாதார நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் தமிழக அரசு, டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதாவது டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், டீக்கடை தொழிலாளிகளுக்கு சளி, இருமல் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.