டீ கடைக்காரரால் வந்த சோதனை…. தனிமைப்படுத்தப்பட்ட முதல்வர் உத்தவ் தாக்கரேயின் 100 பாதுகாவலர்கள்….

 

டீ கடைக்காரரால் வந்த சோதனை….  தனிமைப்படுத்தப்பட்ட முதல்வர் உத்தவ் தாக்கரேயின் 100 பாதுகாவலர்கள்….

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டுக்கு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கோரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தாக்கரேயின் பாதுகாவலர்கள் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நம் நாட்டு மாநிலங்களில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு்ளளது மகாராஷ்டிராதான். மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்குதான் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் சோதனை மாதிரி

மும்பையின் புறநகர் பகுதியான பந்த்ராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சொந்த வீடான மடோஷ்ரீ உள்ளது. உத்தவ் தாக்கரே பாதுகாப்புக்காக சுமார் 100 பாதுகாவலர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து டீ கடைக்காரர் தனிமைப்படுத்தப்பட்டார்.

உத்தவ் தாக்கரே வீடு

அந்த டீ கடைக்காரரிடம்தான் உத்தவ் தாக்கரே வீட்டில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாவலர்கள் டீ வாங்கி குடிப்பது வழக்கம். டீ விற்பனையாளருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் தாக்கரே வீட்டு பாதுகாவலர்கள் 100 பேரும் அருகில் உள்ள கெஸ்ட் ஹவுஸ்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.