டீச்சர்ஸ் விஸ்கி குடிக்கும் ஆசிரியர்கள்! பிரபல இயக்குநரின் சர்ச்சை ட்வீட்!

 

டீச்சர்ஸ் விஸ்கி குடிக்கும் ஆசிரியர்கள்! பிரபல இயக்குநரின் சர்ச்சை ட்வீட்!

நாடு முழுவதும் மக்கள், முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை, ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். 
முகநூலிலும், ட்விட்டரிலும் பலரும் தங்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை நினைவில் கொண்டு, அவர்களது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

நாடு முழுவதும் மக்கள், முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை, ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். 
முகநூலிலும், ட்விட்டரிலும் பலரும் தங்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை நினைவில் கொண்டு, அவர்களது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ramgopal varma

இந்நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஆசிரியர் தினத்திற்கு, ‘என்னை ஒரு நல்ல மாணவனாகவும், மனிதனாகவும் உருவாக்குவதற்கு என்னுடைய எல்லா ஆசிரியர்களும் தவறி விட்டார்கள். அதனால் இந்த ஆசிரியர் தினத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.
ஆசிரியர்களைப் பற்றி இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் கருத்துக்கு நிறைய ரசிகர்கள் எதிர்வினையாற்றி வந்தாலும், ஒரு ரசிகர், ‘பிராண்டை மாற்றிப் பாருங்க சார்… டீச்சர்ஸ் விஸ்கி குடியுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவை அப்படியே ஏற்றுக் கொண்ட இயக்குநர் ராம்கோபால் வர்மா, மீண்டும் ட்விட்டரில், `டீச்சர்ஸ் அனைவரும் டீச்சர்ஸ் விஸ்கி குடித்து டீச்சர்ஸ் டே கொண்டாடுவார்களா..? ச்சும்மா கேட்கிறேன்!’ என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவிற்கும் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.