டி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணி எது தெரியுமா?

 

டி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணி எது தெரியுமா?

டி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணிகள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

மும்பை: டி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணிகள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில், டி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணிகள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ttn

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய 204 ரன்களை சேஸ் செய்து அபாரமாக வென்றது. அந்த வகையில் டி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் எட்டாவது முறையாக இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்து நான்கு முறையுடனும், ஆஸ்திரேலியா மூன்று முறையுடனும், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா இரண்டு முறையுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.