டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை ரிலீஸ்

 

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை ரிலீஸ்

டி 20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுதில்லி: டி 20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

7-வது டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் நாள் வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

உலககோப்பை தொடரில் விளையாடும் 10 அணிகளில் ஆஸ்திரேலியா அணியை தவிர, ஐசிசி தரவரிசையில் அடிப்படையில் மீதமுள்ள 9 அணிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 10 அணிகளில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 போட்டிகளில் நேரடியாக விளையாடுவர்.

மீதமுள்ள 2 அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கும். இதன்படி முன்னாள் சாம்பியனான இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிச்சுற்றில் 6-ல் பங்கேற்று சூப்பர் 12-க்கு முன்னேறுவர். மேலும் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறாமல், வெவ்வேறு பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் லீக் சுற்றில் நேருக்கு நேர் மோதவில்லை.

t20

‘A’ பிரிவு:

  • பாகிஸ்தான்
  • ஆஸ்திரேலியா
  • வெஸ்ட் இண்டீஸ்
  • நியூசிலாந்து
  • ‘B’ பிரிவு:
  • இந்தியா
  • இங்கிலாந்து
  • தென் ஆப்பிரிக்கா
  • ஆப்கானிஸ்தான்

இந்தியா விளையாடும் போட்டிகள் விவரம்: 

அக்டோபர் 24 : இந்தியா- தென்ஆப்பிரிக்கா. அக்டோபர் 29 : இந்தியா- தகுதி பெறும் அணி (ஏ-2). நவம்பர் 1 : இந்தியா- இங்கிலாந்து.
நவம்பர் 5 : இந்தியா- தகுதிபெறும் அணி (பி-1) நவம்பர் 8 : இந்தியா- ஆப்கானிஸ்தான்.
கடந்த 2007-ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.