டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.ஆர்.310 பைக்கின் பி.எஸ்.6 வெர்ஷன் இந்தியாவில் எப்போ வெளியாகிறது தெரியுமா?

 

டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.ஆர்.310 பைக்கின் பி.எஸ்.6 வெர்ஷன் இந்தியாவில் எப்போ வெளியாகிறது தெரியுமா?

இந்தியாவில் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.ஆர்.310 பைக்கின் பி.எஸ்.6 வெர்ஷன் வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: இந்தியாவில் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.ஆர்.310 பைக்கின் பி.எஸ்.6 வெர்ஷன் வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கூடிய விரைவில் பி.எஸ்.6 வெர்ஷன் கொண்ட மோட்டார் வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளன. அந்த வகையில் அனைத்து மோட்டார் வாகன நிறுவனங்களும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பி.எஸ்.6 வெர்ஷன் கொண்ட ஸ்கூட்டர்களும், பைக்குகளும் தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் இதோ புதுவரவு டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.ஆர்.310…இந்த பைக்கின் பி.எஸ். 6 மாடல் வரும் ஜனவரி 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய மாடலில் காஸ்மெடிக் மாற்றங்களும், சில கூடுதல் அம்சங்களும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

apache rr310 / top tamil news

தற்போதுள்ள பைக் மாடலில் இருப்பதை காட்டிலும் சிறந்த டயர்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டோன் பெயிண்ட்டிங், ரேஸிங் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட வாய்ப்புள்ளது. முன்னரே அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்…இந்த பைக்கிலும் பி.எஸ்.6 என்ஜின் செயல்திறன் குறையலாம்.

apache rr310 ttn

முன்னதாக ஆர்.ஆர்.310 பி.எஸ்.4 மாடல் ரூ. 2.27 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பி.எஸ்.6 அப்டேட் காரணமாக புதிய மாடலின் விலை எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் ரூ. 2.50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.