டி.டி.வி.தினகரனால் திமிறும் மு.க.ஸ்டாலின்… காங்கிரஸ் இல்லாமல் திமுக தேறுமா..?

 

டி.டி.வி.தினகரனால் திமிறும் மு.க.ஸ்டாலின்… காங்கிரஸ் இல்லாமல் திமுக தேறுமா..?

டி.டி.வி.தினகரன் பிரித்த வாக்குக்களால் தான் திமுக அத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், டி.டி.வி. தினகரன் மாவட்ட கவுன்சிலர்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

காங்கிரஸ் 2016 தேர்தலில்  நடந்த சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளில் நின்று 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கேட்டு பெற்ற தொகுதிகள் மற்றும் அதில் வெற்றி பெற்ற தொகுதிகளின் சதவீதம் வெறும் 19 %. 2011 தேர்தலில் காங்கிரஸ் கேட்டு பெற்ற தொகுதிகள் 63 . ஜெயித்தது வெறும் 5. அப்படிப்பட்ட காங்கிரஸ், திமுகவிற்கு சவால் விடுவதா? என திமுகவினர் கொதிக்கிறார்கள்.

அடப்போங்கப்பா..? திமுக குண்டர்கள் உள்ளடி வேலை பார்த்ததால்தான் கங்கிரஸ் வெறும் எட்டு தொகுதிகளில் ஜெயித்தது. ராகுல் காந்தி பெயரை சொல்லித்தான் தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது’’ என காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டாசு கொளுத்தி வருகிறார்கள்.

stalin

மற்றொரு தரப்போ, ‘’ நன்றாக புரிந்து கொள்ளுங்கள். காங்கிரஸ், டி.டி.வி.தினகரன் மற்றும் சின்ன சின்ன கட்சிகளால் வெற்றி பெற முடியாது. ஆனால், பிரதான கட்சிகள் வெற்றி பெரும் அளவிற்கு வாக்குக்களை மடைமாற்றம் செய்ய முடியும். உதாரணத்திற்கு டி.டி.வி.தினகரன் பிரித்த வாக்குக்களால் தான் திமுக அத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், டி.டி.வி. தினகரன் மாவட்ட கவுன்சிலர்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 

அதே போல, காங்கிரஸ் வாக்கும் சேரும் போது தான் திமுகவிற்கு 39 இடங்களில் வெற்றியை சுவைக்க முடிந்தது. வேலூர் எம்.பி தேர்தலில் காங்கிரஸ் இல்லை என்றால், அதிமுக வென்றிருக்கும். எம்.பி தேர்தல் ராகுலா? மோடியா? என்ற ரீதியில் நடைபெற்ற தேர்தல். அதனால்தான் 39 தொகுதிகளில் வெற்றியை சுவைக்க முடிந்தது. ஸ்டாலினா? அல்லது எடப்பாடியா? என்று நடைபெற்ற தேர்தல் அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு 5 முதல் 6 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ளது. 

ttv dhinakaran

அதை வைத்து காங்கிரஸ் ஜெயிக்க முடியாது. ஆனால் வாக்கு மடைமாற்றத்தை பிரதான கட்சிகளுக்கு செய்ய முடியும்’’ என கொக்கரிக்கிறார்கள் சின்னச் சின்னக் கட்சிக்காரர்கள். அடுத்தடுத்த தேர்தல்களில் இது தான் பிரதிபலிக்கும். இதுவரை பலமான கூட்டணி இல்லாமல் எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை.