டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கு தூண்டினார்களா? கோவை கோர்ட்டில் வாக்குமூலம்!

 

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கு தூண்டினார்களா? கோவை கோர்ட்டில் வாக்குமூலம்!

சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23) என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை டி.எஸ்.பி விஷ்ணு பிரியா விசாரித்து வந்தார்.  இந்த கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா, திடீரென்று முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது விஷ்ணு பிரியாவின் தற்கொலை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23) என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை டி.எஸ்.பி விஷ்ணு பிரியா விசாரித்து வந்தார்.  இந்த கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா, திடீரென்று முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது விஷ்ணு பிரியாவின் தற்கொலை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கு காவல் துறையில் உயர் அதிகாரிகள் கொடுத்து வந்த மன உளைச்சல் தான் காரணம் என்று கூறப்பட்டது. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியும், உயர் அதிகாரிகளின் அழுத்தம் தான் மகளின் தற்கொலைக்கு காரணம் என்று புகாரளித்தார். 

vishnupriya

பின்னர், விஷ்ணுபிரியாவின் தந்தையின் புகாரில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி தற்கொலை வழக்கை கைவிடுவதாக கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. இதற்கு விஷ்ணுபிரியாவின் தந்தை, ஆட்சேபனை தெரிவித்ததால், மறுவிசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. மறுவிசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி 7 பேரிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரிக்காமல் பழைய விசாரணை அறிக்கையை அப்படியே கொடுத்ததாக எதிர்தரப்பு வக்கீல் அருள்மொழி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், 7 பேரிடம் மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று சி.பி.ஐ. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ரவி, விஷ்ணுபிரியாவின் தந்தை அளித்த மனுவை ஏற்று, விஷ்ணுபிரியாவை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கு தூண்டினார்களா என்று நீதிமன்றமே விசாரிக்கும் என்று உ த்தரவிட்டார். இன்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிபதியின் முன்னிலையில் ஆஜராகி ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். விஷ்ணுபிரியாவின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. விஷ்ணுபிரியாவை தாயாரை வரும் 28-ந் தேதி ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.