டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி : குவியும் பாராட்டுகள் !

 

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி : குவியும் பாராட்டுகள் !

23 துறைகளை அடங்கிய 1,338 பணியிடங்களுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2  தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

தொழில் கூட்டுறவு அதிகாரி, தொழில் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையர், வேலை வாய்ப்புத்துறை இளநிலை அதிகாரி, கூட்டுறவு துறை மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட 23 துறைகளை அடங்கிய 1,338 பணியிடங்களுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2  தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்தனர். குரூப்-2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது. 

exam

முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றோர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், 14,797 பேர் தேர்வு எழுதினர். அதன் பின்னர், நடந்த கலந்தாய்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட தேர்ச்சியாளர்களின் விவரங்கள் நேற்று முன் தினம் இணையதளத்தில் வெளியானது. 

subashini

இதில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற மாணவி 210.5 / 340 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதனால், சுபாஷினிக்கு அவரது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.