டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 நேர்முகத்தேர்வில் மோசடியா? என்ன சொல்கிறது டி.என்.பி.எஸ்.சி

 

டி.என்.பி.எஸ்.சி  குரூப் 1 நேர்முகத்தேர்வில் மோசடியா? என்ன சொல்கிறது டி.என்.பி.எஸ்.சி

தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது என்று சாடி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி, வணிக வரித்துறை ஆணையர் உள்பட 181 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வு முடிவுகள் கடந்த 9ஆம் தேதி வெளியானது.

ttn

இதற்கான நேர்முகத்தேர்வு வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பெண்களை பென்சிலில்  எழுதிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக்கத் தகவல் வெளியானது. 

இதையடுத்து மதிமுக பொது செயலாளரும் எம்பியுமான வைகோ, ‘மதிப்பெண்களை பேனாவால் எழுதக்கூடாது; கண்டிப்பாகப் பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்குத் தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகின்றேன். மதிப்பு எண்களைத் திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது’ என்று சாடி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

ttn

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, வைகோ  தேர்வாணையத்தின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் பென்சில் கொண்டு மதிப்பெண்களை பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை,  கணினி மூலமே மதிப்பெண்கள் பதியப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது. மேலும் இதுகுறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளது.