டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்திவைப்பு – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

 

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்திவைப்பு – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரை ஒத்தி வைத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை: டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரை ஒத்தி வைத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 11 ஆயிரத்து 224 பேருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 4172 பேர் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து விதமான தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வருகிற, ஜூன் 10-ஆம் தேதி தொடங்கவிருந்த டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாகவும், அதன் போட்டிகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதம் வரை கூட அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.