டி.ஆர், சிம்பு மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் போலீஸில் புகார்!

 

டி.ஆர், சிம்பு மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் போலீஸில் புகார்!

‘வல்லவன்’ படத்தின் உரிமை குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் டி.ஆர் மற்றும் சிம்பு மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை: வல்லவன்’ படத்தின் உரிமை குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் டி.ஆர் மற்றும் சிம்பு மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் ஆகிய படங்களின் டப்பிங் உரிமையை போலி ஆவணங்கள் மூலம் விற்க முயல்வதாக  தயாரிப்பாளர் தேனப்பன்,எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்வானி ஆகியோர்  மீது இயக்குநர் டி.ராஜேந்தர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

thenappan

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘காதலா காதலா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு தயாரிப்பாளராக அறிமுகமானவர் பி.எல்.தேனப்பன். இவர் சிம்பு நடித்த ‘வல்லவன் படத்தையும் தயாரித்தார். அந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை தன்னிடம் இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, டி.ஆர் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதனால் கொந்தளித்துப்போன தயாரிப்பாளர் தேனப்பன், ‘வல்லவன்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து இதுவரை மீள முடியாமல் தவிக்கிறேன். சிம்புவால் நஷ்டமடைந்து நடுத்தெருவுக்கு வந்த பல தயாரிப்பாளர்களின் கதை தமிழ் திரையுலகிற்கு நன்றாகவே தெரியும்.

vallavan

இந்நிலையில், அவதூறாக டி.ஆர் புகார் அளித்ததுடன், பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் மீது மான நஷ்ட வழக்குப்போடவுள்ளதாகவும், கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரமாக வல்லவன் படத்தின் ஹிந்தி உரிமம் தன்னிடம் இருப்பதற்கான சான்றாக ஜெமினி லேப் கடிதத்தையும் பி.எல்.தேனப்பன் வெளியிட்டுள்ளார்.