டிவி ஷோ தொகுப்பாளரான ஸ்ருதிஹாசன்!

 

டிவி ஷோ தொகுப்பாளரான ஸ்ருதிஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து அவரது மகள் ஸ்ருதிஹாசனும் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து அவரது மகள் ஸ்ருதிஹாசனும் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற காலம் போய், தற்போது வெள்ளித்திரை பிரபலங்கள் வரிசைக்கட்டி தொலைக்காட்சிகளில் களமிறங்குவது டிரெண்டாகி வருகிறது. முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களமிறங்கினார். அந்த நிகழ்ச்சி மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி ஆகியோர் சமூக பிரச்னையை பேசும் டிவி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகின்றனர். இவர்களையடுத்து, கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் சன் டிவியில் ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கவுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Counting down ! Coming soon !! #hellosago #fun #excited @suntv @viuindia

A post shared by @ shrutzhaasan on

இந்த நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. டிவிக்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்ருதிஹாசனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.