டிவி நிகழ்ச்சியில் எம்பி ஜோதிமணியை இழிவாக பேசிய பாஜக கரு. நாகராஜன்: பரபரப்பு சம்பவம்!

 

டிவி நிகழ்ச்சியில் எம்பி ஜோதிமணியை இழிவாக பேசிய பாஜக கரு. நாகராஜன்: பரபரப்பு சம்பவம்!

ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. எனது நேரமையும்,துணிச்சலும் உலகறியும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

கரூர் எம்பி ஜோதிமணி நேற்று தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் கலந்துகொண்ட பாஜக கரு.நாகராஜன் ஜோதிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார். இதனால் ஆத்திரமடைந்த எம்பி ஜோதிமணி நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். 

rr

இதுக்குறித்து எம்பி ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில், ” நியூஸ் 7 விவாதத்தில் இருந்து பாஜகவின்  கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன்.பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நான் இதைக் கண்டித்து வெளியேறியதும், திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல.

#I_Stand_With_Jothimani https://t.co/jtvHVbtrSr

— Charles Antony (@mazhaikathalan) May 19, 2020

இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள்.இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani 
லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அன்றும் பிஜேபி பொதுவெளியில்  அசிங்கப்பட்டு நின்றது.ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. எனது நேரமையும்,துணிச்சலும் உலகறியும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

vvv

எம்பி ஜோதிமணிக்கு ஆதரவாக #IStandwithJothimani என்ற ஹேஷ்டாக் இணையத்தில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. பலரும் பாஜக கரு.நாகராஜனுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்கள்.