டிவி சீரியலில் களமிறங்குகிறார் நடிகை நமீதாவின் கணவர்!

 

டிவி சீரியலில் களமிறங்குகிறார் நடிகை நமீதாவின் கணவர்!

பிக் பாஸ் என்ட்ரி என களமிறங்கினார். இதை தொடர்ந்து நடிகர் வீராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தமிழில் விஜய், அஜித், விஜயகாந்த், சரத்குமார் என பலருடன் ஜோடியாக வலம் வந்தவர் நடிகை நமீதா . ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்ட இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் நடன நிகழ்ச்சிகளில் நடுவர், பிக் பாஸ் என்ட்ரி என களமிறங்கினார். இதை தொடர்ந்து நடிகர் வீராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

ttn

இந்நிலையில் நமீதாவின் கணவர் வீரா கலர்ஸ் தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகவுள்ள ’உயிரே’ என்னும் தொடரில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள  இந்த தொடர் இந்தியில் ஒளிபரப்பான  ‘சோட்டி சர்தானி’ என்ற கதையின் தமிழ் தழுவலாகும். இதை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நமீதா தெரிவித்துள்ளார்.

இந்த தொலைக்காட்சி தொடரை நடிகை ராதிகாவின் ‘ராடான் மீடியா’ தயாரித்து வழங்குவதாகக் கூறப்படுகிறது.