டிவிய எடுத்துட்டு போக வண்டியில்லையே: திருடர்களுக்கு வந்த சோதனை – வீடியோ

 

டிவிய எடுத்துட்டு போக வண்டியில்லையே: திருடர்களுக்கு வந்த சோதனை – வீடியோ

திருடிய டிவியை எடுத்துச் செல்ல வண்டியில் இடம் பத்தாததால், திருடர்கள் மீண்டும் டிவிய அங்கேயே வைத்துச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

டல்லாஸ்: திருடிய டிவியை எடுத்துச் செல்ல வண்டியில் இடம் பத்தாததால், திருடர்கள் மீண்டும் டிவிய அங்கேயே வைத்துச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் ப்ளாட் ஸ்கிரீன் டிவி ஒன்றை திருடிய இருவர், அதை வண்டியில் வைக்க இடம் பத்தாமல் மீண்டும் அங்கேயெ வைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் 2015 செரோக்கீ ஜீப்பை ஓட்டி வந்திருக்கின்றனர். இந்தக் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.

திருட வந்த நபர்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சிசிடிவியில் அவர்கள் முகம் பதிவாகியுள்ளது, காவல்துறை அவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது.