டிவிட் செய்ய  நெட் வேண்டாம் ! வந்தது புதிய நடைமுறை !

டிவிட் செய்ய  நெட் வேண்டாம் ! வந்தது புதிய நடைமுறை !

செல்போனில் இணையதளங்கள் பயன்படுத்தும்போது ஒரு சில சமயங்களில் இன்டர்நெட் வேகம் குறைந்தாலோ அல்லது தொடர்பு துண்டிக்கப்பட்டாலோ பேஸ்புக் டிவிட்டரில் தகவல்கள் அனுப்ப முடியாமல் சிரமம் ஏற்படும். வன்முறை, போராட்டங்கள் நடைபெறும் நேரத்தில் போலி செய்திகள் பரவாமல் இருக்க அரசாங்கமே சில சமயங்களில் சமூக வலைதளங்களை முடக்கி விடும்.

தற்போது இணையதள சேவை இல்லாமலேயே நமது கருத்தை டுவிட்டரில் பதிவிடலாம். இன்டெர்நெட் இல்லாமல் டுவிட் செய்வது என்பதை பார்ப்போம். 

no internet

முதற் கட்டமாக, தங்களது மொபைல் நம்பரை டுவிட்டர் அக்கவுண்டுடன் இணைத்து வைத்து கொள்ள வேண்டும். மொபைல் எண் இணைக்கப்பட வில்லை என்றால் இது வேலை செய்யாது. இணையதளம் இயங்காதபோது டுவிட் செய்யலாம். இணையதளம் பயன்படாதபோது, ஷார்ட் கோட் உதவும். டுவிட்டர் ஷார்ட் கோட் என்பது எஸ்எம்எஸ் மூலம் டுவிட் செய்வதாகும். முதலில் உங்கள் டுவிட் அக்கவுண்ட்டை உங்கள் செல்போன் எண்ணுடன் இணைக்க வேண்டும். பின்னர் நீங்கள் பதிவிட விரும்பும் கருத்தை 9248948837 என்கிற எண்ணுக்கு மெசேஜ் செய்ய வேண்டும். பின்னர் அந்த பதிவு தானாக டுவிட்டர் அக்கவுண்டில் பதிவாகி விடும். டுவிட்டரின் ஆதரவு பக்கமான டுவிட்டர் ஷார்ட் கோட் இந்த செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்த எஸ்எம்எஸ்-ஐ நீங்கள் டுவிட்டரோடு லிங்க் செய்துள்ள நம்பரில் இருந்து அனுப்ப வேண்டும் என்பது அவசியம். 
ஆனால் இந்த சேவை இணையதளம் முடக்கத்தில் இருக்கும்போது மட்டும்தான் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.