டிவிட்டரில் டிரெண்டாகும் #கந்துவட்டிரஜினி ஹேஷ்டேக்…கடுப்பில் ரசிகர்கள்!

 

டிவிட்டரில் டிரெண்டாகும் #கந்துவட்டிரஜினி ஹேஷ்டேக்…கடுப்பில்  ரசிகர்கள்!

ஏராளமான வெற்றிகளும், விருதுகளும் கிடைத்தன. 70 வயதான போதிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

தமிழ் திரையுலகில் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தான். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அவர், சாதாரண பஸ்  கண்டக்டராக வாழ்க்கை தொடங்கி தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். வில்லன், குணச்சித்திர வேடம், ஹீரோ என முன்னேறிய ரஜினிக்கு ஏராளமான வெற்றிகளும், விருதுகளும் கிடைத்தன. 70 வயதான போதிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

 

 

இதனிடையே கடந்த 2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிராக புகார் எழுந்தது. இதுகுறித்து அபராதம் விதிக்கக்கோரிய வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. நீதிமன்றத்தில் நிலுவையில் இந்த வழக்கை நேற்று முன்தினம் வருமானவரித்துறை திடீரென்று வாபஸ் பெற்றது. 

 

ttn

இதற்கு காரணம்  2002-03-ம் நிதியாண்டில் கோபாலகிருஷ்ண ரெட்டி, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு ரஜினி   2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார். இதற்காக 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை வட்டியாக பெற்றுள்ளார். இதற்காக ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்தியுள்ளார். குறிப்பாக கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயும், அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாயையும் ரஜினி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதில்  ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை என்றும், இதன் காரணமாக, 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.கடன் கொடுத்ததைத் தொழிலாக கருதமுடியாது. தெரிந்தவர்களுக்கு நட்பு ரீதியில் கடன் கொடுத்தேன் என்று ரஜினி கூறியதால் அவர் மீதான வழக்கை  வாபஸ் பெறுவதாக வருமானவரித் துறை விளக்கம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் ரஜினி வட்டிக்கு காசு கொடுத்த செய்தி தீயாக பரவ தற்போது இணையத்தில் #கந்துவட்டிரஜினி என்ற ஹேஷ்டாக் ஒன்று வைரலாகி வருகிறது. இதைக்கண்டு கடுப்பான  ரஜினி ஆதரவாளர்கள் ஒருபக்கம், #மக்களுக்காக_ரஜினி என்ற ஹேஷ்டாக்கையும் வைரலாக்கி  வருகின்றனர்.