டிவிட்டரில் டிரெண்டாகும் ரஜினியே_எங்கள்_முதல்வர் ஹேஷ்டாக்!

 

டிவிட்டரில் டிரெண்டாகும் ரஜினியே_எங்கள்_முதல்வர் ஹேஷ்டாக்!

ரஜினி ரசிகர்கள், அரசியல் நோக்கர்கள் என  ஒட்டுமொத்த தமிழகமே ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்காக ஆர்வமாக காத்திருக்கிறது.

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால்  ரஜினி தலைமையில் கடந்த 5 ஆம் தேதி  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

tn

இதையடுத்து ரஜினிகாந்த் இன்று  காலை 10 மணிக்கு எம்.ஆர்.சி நகரிலுள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.  அதில் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ttn

அரசியல் கட்சி  தொடங்குவேன் என்று  ரஜினி அறிவித்தபிறகு  ஒரு வருடம் கழித்து அதிகாரப்பூர்வமாகப் பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்திப்பது என்பது இதுவே முதல் முறையாகும். 

ttn

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள், ரஜினி ரசிகர்கள், அரசியல் நோக்கர்கள் என  ஒட்டுமொத்த தமிழகமே ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்காக ஆர்வமாக காத்திருக்கிறது. தற்போது  #ரஜினியே_எங்கள்_முதல்வர் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.