டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 2வி பைக்கின் பி.எஸ்.6 மாடல் வெளியானது

 

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 2வி பைக்கின் பி.எஸ்.6 மாடல் வெளியானது

டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபல ஸ்போர்ட் பைக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 2வி பைக்கின் பி.எஸ்.6 மாடல் வெளியாகி உள்ளது.

டெல்லி: டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபல ஸ்போர்ட் பைக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 2வி பைக்கின் பி.எஸ்.6 மாடல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் பி.எஸ் 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அறிமுகம் ஆகிக் கொண்ட இருக்கின்றன. வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் பி.எஸ்.6 என்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபல ஸ்போர்ட் பைக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 2வி பைக்கின் பி.எஸ்.6 மாடல் வெளியாகியுள்ளது. இதன் விலை எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் ரூ.93,500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் அப்பாச்சி மாடல் பைக் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையின் 150சிசி பைக்குகள் செக்மன்ட்டில் ராஜாவாக திகழ்ந்து வந்த பஜாஜ் பல்சர் 150 மாடலுக்கு கடும் போட்டி அளிக்கும் விதமாக அப்பாச்சி மாடல் பைக்குகள் விற்பனையாகின என்பது நினைவு கூறத்தக்கது.

இந்த புதிய அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 2வி பைக்கில் பெரிதாக எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என்பது பைக் பிரியர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமான விஷயமாக அமைந்துள்ளது. பைக்கின் பவர் மற்றும் டார்க் கொஞ்சம் அதிகரித்துள்ளது. மேலும் பியுல்-இன்ஜெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளதால் மைலேஜ் கொஞ்சம் உயர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இந்த பைக்கில் எக்ஸாஸ்ட் பைப்பின் தடிமன் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பை போலவே டிரம் மற்றும் டிஸ்க் வேரியன்ட்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பது கூடுதல் சிறப்பு. அதேபோல முன்பை காட்டிலும் ஒரு கிலோ எடை அதிகரித்துள்ளது.