டிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ?!

 

டிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ?!

ஜியோ ஜிகா பைபர் என்ற இந்தச் சேவை இன்னமும் வணிக ரீதியாய் சரியாக கிடைக்கவில்லை. முக்கிய நகரங்களில், சில இடங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் கிடைக்கிறது.

அரசாங்கம் சார்ந்த துறைகளில் எல்லாம் ஜியோ நிறுவனம் கோலோச்சி வருகிறது. தனியார்மயமாக்களை மோடி அரசாங்கம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சமீபத்தில்தான் இதுதொடர்பாக போராட்டம் நடத்தினர்.

zvxzv

தற்போது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்களின்படி ஒவ்வொரு மாதமும் கேபிள் டிவிக்கு 300-500 ரூபாய் ஆகிறது. நல்ல வேகத்துடன் இணையம் வேண்டுமென்றால் 1000 ரூபாய். சில நிறுவனங்கள் பிராட்பேண்டுடன் லேண்டுலைனும் இலவசமாகத் தருகிறார்கள். இல்லையென்றால் அதற்கு 300 ரூபாய் என மூன்றுக்கும் சேர்ந்து 1,500 ரூபாய் வரை ஆகலாம். ஆனால் ஜியோ க்ரூப், இவை மூன்றையும் ஒரே கேபிளில் தந்து 600 ரூபாய் மட்டும் வாங்க முடிவு செய்திருக்கிறது.

vvV

ஜியோ ஜிகா பைபர் என்ற இந்தச் சேவை இன்னமும் வணிக ரீதியாய் சரியாக கிடைக்கவில்லை. முக்கிய நகரங்களில், சில இடங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் கிடைக்கிறது. அதுவும் இலவசமாக. வைப்புத்தொகையாக 4,500 ரூபாய் கட்டிவிட்டு இந்தச் சேவையை இலவசமாகப் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அடுத்த சில மாதங்களில் இந்த காம்போ கிடைக்கவுள்ளது.

jio

அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சந்தைக்கும் வந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மாதம் 600 ரூபாய் செலவாகும் இந்தக் காம்போ பேக்கில் 100 MBPS வேகத்தில் 100 ஜி.பி பிராட்பேண்டும், அளவற்ற வாய்ஸ்கால்களும், 600 டிவி சேனல்களும் கிடைக்கும். வீட்டிலிருக்கும் லேப்டாப், மொபைல், கணினி என 40 ஸ்மார்ட் டிவைஸ்கள் வரை இதில் கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

அரசாங்கத்துக்கு முறையாக எதுவும் செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் அத்தனையையும் தாரை வார்த்திருக்கிறது மோடி அரசாங்கம்.