டிரான்ஸ்பருக்கு எதிர்ப்பு… டியூட்டியில் சேர ஓடிய எஸ்.ஐ-ஆல் பரபரப்பு!

டிரான்ஸ்பருக்கு எதிர்ப்பு… டியூட்டியில் சேர ஓடிய எஸ்.ஐ-ஆல் பரபரப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதிதாக பணியில் சேர வேண்டிய காவல் நிலையத்துக்கு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் போலீஸ்லைன் என்ற கவால் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் விஜய் பிரதாப். இவரை பித்தோலி என்ற காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இந்த இட மாறுதலை எதிர்பார்க்காத சப் இன்ஸ்பெக்டர் விஜய் பிரதாப், பணிபுரிந்த காவல் நிலையத்திலிருந்து பித்தோலி காவல் நிலையத்துக்கு ஓட்டம்பிடித்துள்ளார்.

vijay pratap

சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓடுவதைக் கண்ட பொது மக்களும், திருடனைத்தான் அவர் துரத்திக்கொண்டு செல்கிறாரோ என்று அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அவர் ஓடிக்கொண்டே இருந்துள்ளார். நீண்ட தூரம் ஓடிய சோர்வில் அவர் சாலையிலேயே மயங்கிவிழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் இது குறித்து அவரிடம் கேட்டபோது, இன்ஸ்பெக்டரின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். சீனியர் சூப்பரிண்டென்டிடம் இது குறித்து நான் தெரிவித்திருந்தேன். ஆனாலும், இடமாறுதல் செய்யப்பட்டதில் அதிர்ச்சியடைந்தேன். அதனால், ஓடியே பித்தோலி செல்ல முயன்றேன்” என்றார்.

ஒன்லைன் காவல் நிலையத்துக்கும் பித்தோலிக்கும் இடையே 65 கி.மீ தூரம் உள்ளது. எஸ்.ஐ ஒருவர் திடீரென்று சாலையில் ஓடிச் செல்ல முயன்று மயங்கி விழுந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.