“டிரஸ் இல்லாம டான்ஸ் ஆட வைச்சோம்” -ஆபாச படத்தில் சிக்கிய சினிமா இயக்குனர்கள் .

 

“டிரஸ் இல்லாம டான்ஸ் ஆட வைச்சோம்” -ஆபாச படத்தில் சிக்கிய சினிமா இயக்குனர்கள் .

பாலிவுட் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச பட விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால், பல சினிமா புள்ளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது பாலிவுட்டில் பரபரப்பையுண்டு பண்ணியுள்ளது.


பாலிவுட் நடிகை கெஹானா வசிஸ்த் தலைமையில் செயல்பட்ட ,ஆபாச பட மோசடி தொடர்பான விசாரணையில் மேலும் ஒரு சினிமா இயக்குனர் சிக்கியுள்ளார் .கடந்த புதன்கிழமை சூரத்தில் இருக்கும் தன்வீர் ஹாஷ்மி என்ற திரைப்பட இயக்குனரை போலீஸ் கைது செய்தது.இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ‘வியான்’ இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர் உமேஷ் காமத்துக்கு, 20க்கும் மேற்பட்ட சின்ன தயாரிப்பாளர்கள் மூலம் இவர் ஆபாச படங்களை எடுத்து அனுப்பியுள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளார்கள் .
கைது செய்யப்பட்டுள்ள 40 வயதான தன்வீர் ஹாஷ்மி இதுவரை எட்டு சினிமா படங்களை இயக்கியுள்ளார் .அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ,நடிக்க ஆர்வமுள்ள புதுமுக நடிகைகளை வைத்து சீரியல் எடுப்பதாக கூறி ,ஆபாச வீடியோக்களை படம்பிடித்து ஏமாற்றினார்.அவர் மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள தனது குழுக்கள் மூலம் ஆபாச வீடியோக்களை படம் பிடித்து காமத்துக்கு ஒப்படைத்துள்ளார் .

“டிரஸ் இல்லாம டான்ஸ் ஆட வைச்சோம்” -ஆபாச படத்தில் சிக்கிய சினிமா இயக்குனர்கள் .

இந்த விவகாரத்தில் ‘ஹாட்ஹிட் ஆப்’ மூலம் பாலியல் வீடியோக்களைப் பதிவேற்ற வெளிநாட்டு ஐபி முகவரிகளைப் பயன்படுத்திய ரோவா கான் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து இந்த மோசடியை மேலும் அம்பலப்படுத்தினர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நடிகை கெஹானா வாசிஸ்டை தங்களது ஆபாச வீடியோ தயாரிப்பு மோசடிக்கு பயன்படுத்தி,அதை எஸ்கெப்னெவ்.டி.வி.யில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் நடிக்க ஆர்வமுள்ள நடிகைகளை வலைத் தொடர்கள் மற்றும் OTT- படங்களில் அவர்களுக்கு நடிக வாய்ப்பு வழங்குவதாக ஏமாற்றி, ஆபாச வீடியோக்களை படமாக்கியதையும் போலீசார் கண்டறிந்தார்கள் .இந்த விவகாரத்தில் இன்னும் சில நாட்களில் மேலும் பல சினிமா புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

“டிரஸ் இல்லாம டான்ஸ் ஆட வைச்சோம்” -ஆபாச படத்தில் சிக்கிய சினிமா இயக்குனர்கள் .