டிரம்ப் வருகை… ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை முடிவு செய்த மோடி!

 

டிரம்ப் வருகை… ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை முடிவு செய்த மோடி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா எங்களுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை, இருப்பினும் மோடியை பிடிக்கும் என்பதால் வருகிறேன்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் சில தினங்களில் இந்தியா வர உள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து வாங்கத் திட்டமிட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

modi-banner

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா எங்களுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை, இருப்பினும் மோடியை பிடிக்கும் என்பதால் வருகிறேன் என்று டிரம்ப் கூறிவிட்ட நிலையில் அப்படி எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 
இந்த நிலையில் டிரம்பை குளிர்விக்கும் பணிகளில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து 24 லாக்ஹீட் மார்டின் எம்.எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்குதவற்கான ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. டிரம்ப் வரும்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர்களின் மதிப்பு 2.4 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த ஹெலிகாப்டர்கள் வருகையின் மூலம் இந்தியக் கடற்படையின் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.