டிரம்ப் வருகை எதிரொலி… ஆக்ராவை சுத்தமானதாகக் காட்ட யமுனையில் தண்ணீர் திறந்த உ.பி அரசு!

 

டிரம்ப் வருகை எதிரொலி… ஆக்ராவை சுத்தமானதாகக் காட்ட யமுனையில் தண்ணீர் திறந்த உ.பி அரசு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அகமதாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் ஆக்ரா வருகிறார். ஆக்ராவில் தாஜ்மஹாலை ஒட்டி யமுனை ஆறு ஓடுகிறது. தொழிற்சாலை, மனித கழிவுகளால் யமுனை ஆறு சென்னையின் கூவம் போல காட்சியளிக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும்போது ஆக்ரா யமுனை ஆற்றில் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க 500 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.

trump-visit

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அகமதாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் ஆக்ரா வருகிறார். ஆக்ராவில் தாஜ்மஹாலை ஒட்டி யமுனை ஆறு ஓடுகிறது. தொழிற்சாலை, மனித கழிவுகளால் யமுனை ஆறு சென்னையின் கூவம் போல காட்சியளிக்கிறது. அதிலிருந்து துர்நாற்றம் வேறு வீசுகிறது. டிரம்ப் வரும்போது துர்நாற்றம் வீசாமல் இருக்க யமுனை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

yamuna-river-098

இது குறித்து உத்தரப்பிரதேச மாநில பாசனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “டிரம்ப் வருகையை மனதில் கொண்டு கங்காநகரில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது யமுனையின் சுற்றச்சூழலை மேம்படுத்த உதவும். திறக்கப்படும் இந்த தண்ணீர் மதுராவுக்கு பிப்ரவரி 20ம் தேதியும் ஆக்ராவுக்கு 21ம் தேதி பிற்பகலிலும் வரும்”
உத்தரப்பிரதேச மாநில சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அரவிந்த் குமார் கூறுகையில், “யமுனையில் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் துர்நாற்றம் தடுக்கப்படும். மேலும் யமுனை, மதுரா மற்றும் ஆக்ராவில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும்” என்றார்.