டிரம்ப் மனைவி நிகழ்ச்சியிலிருந்து கெஜ்ரிவால் நீக்கம்! – தனியார் நிகழ்ச்சி என்று பா.ஜ.க விளக்கம்

 

டிரம்ப் மனைவி நிகழ்ச்சியிலிருந்து கெஜ்ரிவால் நீக்கம்! – தனியார் நிகழ்ச்சி என்று பா.ஜ.க விளக்கம்

இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா இந்தியா வருகின்றனர். 24ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆக்ரா செல்கின்றனர். அங்கிருந்து 25ம் தேதி டெல்லி வருகின்றனர். டெல்லி வரும் மெலினா, அங்குள்ள டெல்லி அரசுப் பள்ளியைப் பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் டெல்லிக்கு வரும் மெலினா ட்ரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சியிலிருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா இந்தியா வருகின்றனர். 24ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆக்ரா செல்கின்றனர். அங்கிருந்து 25ம் தேதி டெல்லி வருகின்றனர். 

trump

டெல்லி வரும் மெலினா, அங்குள்ள டெல்லி அரசுப் பள்ளியைப் பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்கிறார். டெல்லி அரசு பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுபற்றி பார்வையிடவே மெலினா வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பட்டியலிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா பெயர் நீக்கப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மகிழ்ச்சி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ததே சிசோடியாதான் என்பதால் இந்த பெயர் நீக்கம் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

trump modi

ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி மறுத்துள்ளது. மெலினா பங்கேற்கும் நிகழ்ச்சி என்பது மத்திய அரசு நிகழ்ச்சி இல்லை. இதை அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. தனியார் நிகழ்ச்சி என்பதால் இதற்கும், பெயர் நீக்கத்துக்கும் மத்திய அரசுக்குத் தொடர்பு இல்லை என்று பா.ஜ.க கூறியுள்ளது.