“டிரம்ப் தான் என் கடவுள்” : சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகரின் கோரிக்கை இதுதான்!

 

“டிரம்ப் தான் என் கடவுள்” :  சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகரின் கோரிக்கை இதுதான்!

இந்தியாவுக்கு வரவுள்ள  டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என மத்திய அரசிற்கு டிரம்ப்பின் தீவிர ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ttn

தெலுங்கானா மாநிலம் ஜங்கனோனை சேர்ந்தவர் புஷா கிருஷ்ணா. டிரம்ப்பின் தீவிர ரசிகரான 6 அடி  உயரத்தில் டிரம்பிற்கு சிலை வைத்து அதற்கு தினமும் பாலபிஷேகம் செய்து வழிபட்டு  வருகிறார்.  இது குறித்து கூறும் அவர், டிரம்ப்  எனக்கு கடவுள் மாதிரி. அவர் நீண்ட காலம் வாழவேண்டும் என்று வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வருகிறேன்.

rrn

இந்தியா – அமெரிக்க உறவு பலமாக இருக்க வேண்டும் என பூஜை செய்து வருகின்றேன். நான் காலையில் அவர் புகைப்படத்தை வழிபட்ட  பிறகே வேலைகளை தொடங்குவேன் என்று கூறி வியப்பை ஏற்படுத்தும் இவர் இந்தியாவுக்கு வரவுள்ள டிரம்ப்பை  சந்திக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் அக்கம் பக்கத்தினர் புஷா கிருஷ்ணா டிரம்ப் கிருஷ்ணா  என்றே அழைத்து வருகிறார்கள். 

ttn

முன்னதாக அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை வ அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் வரும் 24 ஆம் தேதி  திறந்து வைக்கிறார். இதனால் மத்திய அரசு டிரம்ப் வருகைக்காகப் பல ஏற்பாடுகளை முனைப்புடன் செய்து வருவது  குறிப்பிடத்தக்கது.