டியூஷனுக்காக டார்ச்சர் செய்த ஆசிரியர்; தற்கொலை செய்த மாணவன் – மதுரையில் சோகம்

 

டியூஷனுக்காக டார்ச்சர் செய்த ஆசிரியர்; தற்கொலை செய்த மாணவன் – மதுரையில் சோகம்

தன்னிடம் டியூஷனுக்கு வரவில்லை என்பதற்காக மாணவன் ஒருவனை ஆசிரியர் கொடுமை செய்துள்ளார். இதனால், மனம் நொந்த அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தொட்டப்பாநாயக்கனூரைச் சேர்ந்த மாணவர் பாலாஜி. இவர் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

தன்னிடம் டியூஷனுக்கு வரவில்லை என்பதற்காக மாணவன் ஒருவனை ஆசிரியர் கொடுமை செய்துள்ளார். இதனால், மனம் நொந்த அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தொட்டப்பாநாயக்கனூரைச் சேர்ந்த மாணவர் பாலாஜி. இவர் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரவி. பள்ளி முடிந்ததும் டியூஷனும் எடுத்துவந்துள்ளார். ரவி ஒன்பதாம் வகுப்பு வரை இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளான். 10ம் வகுப்புக்கு வந்ததும் வேறு இடத்தில் டியூஷன் சேர்ந்துள்ளான். இதனால், பாலாஜி மீது ரவிக்கு கோபம் இருந்து வந்துள்ளது.
இதனால், சக மாணவர்கள் முன்னிலையில் பாலாஜியை திட்டுவது, அடிப்பது என்று இருந்துள்ளார். எந்த ஒரு கேள்வியாக இருந்தாலும் முதலில் பாலாஜியிடம் இருந்துதான் ஆரம்பிப்பாராம். இதனால், பள்ளிக்கு செல்லவே பிடிக்காமலிருந்துள்ளான் பாலாஜி. இது குறித்து தன்னுடைய பெற்றோரிடமும் கூறிவந்துள்ளான். ஒரு வருடம் சமாளித்துக்கொள், அடுத்த வருடம் வேறு பள்ளிக்கு போய்விடலாம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

balaji

கடந்த சனிக்கிழமை சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போதும் பாலாஜியை கேள்விகேட்டு ரவி அசிங்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்கூடத்தைவிட்டு பாதியிலேயே பாலாஜி வீடு திரும்பிவிட்டான். இனி பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று கூறியுள்ளான். எனவே, அவனது பெற்றோர் அவனை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும், சமாதானம் அடையாத பாலாஜி மன வருத்தத்திலிருந்துள்ளான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, பாலாஜி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தான். இது குறித்து உசிலம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ஆசிரியர் ரவி செய்த கொடுமைகள் பற்றி அப்போது அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பாலாஜியின் நோட்டு புத்தகங்களை ஆய்வு செய்த போலீசார், அதிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தனர். 
அதில், “என் சாவுக்கு காரணம் ரவி. என்னை ரொம்பவும் கொடுமை செய்தான். அவனுக்கு தண்டனை தர வேண்டும். முக்கியமாக என் ரத்தக் கண்ணீருக்கு காரணமான ரவிக்கு தண்டனை தர வேண்டும். நண்பனுக்கும் பெற்றோருக்கும் இறுதி வணக்கம்” என்று எழுதப்பட்டிருந்தது.

suicide

இதைத் தொடர்ந்து ஆசிரியர் ரவியை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், இந்த கடிதத்தை மாணவன் பாலாஜிதான் எழுதினானா என்றும் ஒப்பீடு ஆய்வு நடத்தி வருகின்றனர். 
டியூஷனுக்கு வராத மாணவனை ஆசிரியர் டார்ச்சர் செய்ததால் அவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது உசிலம்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை கண்காணிக்கத் தவறிய பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது