டிப்ஸ் தரலாம் அதுக்காக இப்படியா?! அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க பாடகர்..!

டிப்ஸ் தரலாம் அதுக்காக இப்படியா?! அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க பாடகர்..!

நாம் ஹோட்டலுக்கு போகும்போது நமக்கு பிடித்தமான உணவுகளை கொண்டு வந்து பரிமாறும் வெயிட்டரின் நடவடிக்கை நமக்குப் பிடித்துப் போனால் பொதுவாக எவ்வளவு டிப்ஸ் வைப்போம்…  ஒரு 20,30 மிஞ்சிப்போனால் 50 ரூபாய் வைப்போம். ஆனால் இங்கு ஒருத்தர் புதுவருடத்தின் துவக்கமாக $2020 டாலர்கள் டிப்ஸாக வைத்துள்ளார்.இப்படிப்பட்ட தர்ம பிரபுவை எங்கும் பார்த்ததுண்டா!

அமெரிக்கன் நடிகரும் பாடகரும்,பாடல் ஆசிரியரம், இன்னும் பல திறமைகளை வைத்துள்ள மிகவும் பேமஸான டோனி வாஹல்பேர்க் இணையதளங்களில் தனது செயலுக்காக அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.அவர் சென்றிருந்த இல்லினாய்ஸ் ரெஸ்டூரண்டில் தனக்கு சேவை செய்த பெத்தானி என்ற பணிப்பெண்ணுக்கு டிப்ஸாக $2020 டாலர்களை தந்துள்ளார்,இது குறித்து அவர் சொல்லும் போது எல்லோரும் புத்தாண்டுக்கு வெவ்வேறு சபதம் எடுப்பார்கள்… நான் இப்படி டிப்ஸ் கொடுக்கணும் என்று சபதம் எடுத்துக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

donnie walhberg

இந்த செல்வ சீமான் செய்த இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் அவரது மனைவி ஜென்னி மெக்கார்த்தி அந்த பில்லின் புகைப்படத்தையும் அதில் குறிப்பிட்டிருந்த டிப்பின் மதிப்பையும் தனது ட்விட்டர் கணக்கில் #2020tipchallenge என குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.அந்த பதிவில் தனது கணவரை மிகவும் அற்புதமானவர் என குறிப்பிட்டிருந்தார்.இந்த டிப்ஸ் பணம் நம் நாட்டு மதிப்பின்படி ரூபாய் 1.44 லட்சம்!