டிடிவி தினகரன் 20 ரூபாய் அயோக்கியன், டோக்கன் செல்வன்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

 

டிடிவி  தினகரன் 20 ரூபாய் அயோக்கியன், டோக்கன் செல்வன்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

டிடிவி தினகரன் ஒரு 20 ரூபாய் அயோக்கியன் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை: டிடிவி தினகரன் ஒரு 20 ரூபாய் அயோக்கியன் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க  சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘சிலர் சினிமாவில் முதன் இன்னிங்ஸை முடித்துவிட்டு இரண்டாவது இன்னிங்ஸாக அரசியலுக்கு வரப் பார்க்கின்றனர். சிலரோ படத்தை வெளியிடுவதற்காக அரசியலுக்கு வருகிறார்கள். மாபியா கலாச்சாரத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது மன்னார்குடி குடும்பம்தான். மன்னார்குடி கூட்டம் இன்று வெளியே  சுற்றி திரிகிறது. அந்தக் கூட்டத்தில் இருந்து தப்பிய ஓநாய் ஒன்று இந்த ஆட்சியைப் பற்றி ஊளையிட்டுச் செல்கிறது. அவர் ஒரு 20 ரூபாய் அயோக்கியன், டோக்கன் செல்வன் என்று சொன்னால் ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் உத்தம புத்திரன் என்று சொல்லி திரிகின்றனர். ஓசி பிரியாணிக்கு சண்டை போட்டவர்கள், அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கியவர்கள் திமுகவினர். ஆனால் நாங்களோ  எதிரிகளுக்குத் தோல்வியை கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள்’ என்று கூறியுள்ளார்.