டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம்; நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு!

 

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம்; நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு!

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டில் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,-க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டில் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர், அவர்களது தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

18 mlas

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி இரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் மற்றும் தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரை அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், இரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் வெளிப்படையாகவே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக பேசியும், செயல்பட்டும் வருகின்றனர். தமிமுன் அன்சாரி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ttv dhinakaran

தகுதி இழப்பு சட்டவிதி 6-ன் படி இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, சபாநாயகர், அரசுக்கொறடா, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இதுகுறித்து மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் வாசிங்க

4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்; தொண்டர்கள் உற்சாகம்!