டிடிவியின் தங்க விக்கெட்டை காலி செய்த அமைச்சர் தங்கமணி… அதிமுகவுக்கு செல்கிறார் தங்கத்தமிழ்ச்செல்வன்?

 

டிடிவியின் தங்க விக்கெட்டை காலி செய்த அமைச்சர் தங்கமணி… அதிமுகவுக்கு செல்கிறார் தங்கத்தமிழ்ச்செல்வன்?

அமமுக கட்சியின் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: அமமுக கட்சியின் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அக்கட்சியில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என பலரும் திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ செல்ல முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை தன்னுடனே தக்கவைக்க டிடிவி முயன்று வருகிறார். இதற்காகத்தான் தகுதி நீக்க எம்.எல்.ஏக்களுடன் அவர் சென்று நேற்று சசிகலாவை சந்தித்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

sasikala

இதற்கிடையே அமமுகவில் இருப்பவர்களை திமுகவுக்கு செல்லவிடாமல் தன் பக்கம் இழுக்க அதிமுக தீவிரமாக பணியாற்றி வருவதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த செந்தில் பாலாஜியை திமுக வளைத்துவிட்டதால் தற்போது, டிடிவியின் மனசாட்சி என கருதப்படும் தங்கத்தமிழ்ச்செல்வனை வளைக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

tamil

இதற்காக பிரபல ஹோட்டல் ஒன்றில் அமைச்சர் தங்கமணி, தங்கத்தமிழ்ச்செல்வனிடமும், கதிர்காமுவிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார் எனவும், அப்போது ஓபிஎஸ்ஸையும், ஈபிஎஸ்ஸையும் எதிர்த்து அரசியல் செய்த நாங்கள் இப்போது அதிமுகவுக்கு வந்தால் அவர்கள் எங்களுக்கு எந்த விதத்திலும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என தங்கத்தமிழ்ச்செல்வனும், கதிர்காமுவும் அமைச்சரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

tahngama

ஆனால் தங்கத்தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த தங்கமணி, அவரிடம், “ நீங்கள் எங்களுடன் வந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் தொகுதியிலேயே நிற்கவைத்து வெற்றி பெற செய்து அமைச்சர் பதவியும் கொடுக்க இருவரும் தயாராக இருக்கிறார்கள். உங்களது எதிர்காலத்தையும் கொஞ்சம் பாருங்கள், செந்தில் பாலாஜி தனது எதிர்காலத்தை நினைத்துதான் திமுகவில் செட்டிலாகிவிட்டார்” என கூறியதாகவும், அதற்கு தங்கத்தமிழ்ச்செல்வன் ”கொஞ்சம் டைம் கொடுங்க யோசித்து சொல்கிறேன்” என கூறியதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

tahngam

இதனால் டிடிவி தினகரன் கட்சியின் முக்கிய விக்கெட்டாக பார்க்கப்படும் தங்கத்தமிழ்ச்செல்வனை அதிமுக 90% வளைத்துவிட்டதாகவும், விரைவில் இணைப்பு படலம் நடைபெறலாம் எனவும் அதிமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.