டிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு! 

 

டிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு! 

ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒருவர் 2019ஆம் ஆண்டு மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 22,680 பயணிகளிடமிருந்து ஒரு கோடியே 51 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளார்.

மத்திய ரயில்வேயில் பறக்கும் படையில் டிராவிலிங் டிக்கெட் இன்ஸ்பெக்டராக இருப்பவர் எஸ்.பி.கலண்டே. இவர் பயணிகளிடம் அதிக அபராதம் வசூலித்த டிக்கெட் பரிசோதகர் பட்டியலில் முதலிடத்திலுள்ளார்.  இதற்கு அடுத்தடுத்த இடங்களில் எம்.எம்.ஷின்டே, டி.குமார் மற்றும் ரவி குமார் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடமிருந்து 1 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்துள்ளனர்.

Railway ticket checker

இந்தியா முழுவதும் சுமார் 22,680 பயணிகளிடமிருந்து ஒரு கோடியே 51 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளாராம் கலண்டே. என்னதான் பேருந்தைவிட ரயில் கட்டணம் குறைவாக இருந்தாலும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ. 192.51 கோடி ரூபாய்  அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.