டிஜிட்டல் உலகின் அழியாத கோலங்கள்!

 

டிஜிட்டல் உலகின் அழியாத கோலங்கள்!

கார்பன் பேப்பர் அடியில் வச்சி எழுதிட்டு ஒரிஜினலை தூக்கிப் போட்டுட்டாலும், இன்னொரு காப்பி அப்படியே இருக்குறது மாதிரி என்னதான் ஆன்லைன்ல ஹிஸ்டரியை டெலிட் பண்ணினாலும் அது முழுசும் அழிஞ்சுப் போகுறது இல்ல.

குழந்தைங்க சிலேட்ல பல்பத்தால எழுதுறதை எச்சில் தொட்டு அழிக்கிறது மாதிரி, நாம ஸ்மார்ட்போன்ல அமுக்குற ஒவ்வொரு செயலையும் அழிச்சிட முடியாது. கார்பன் பேப்பர் அடியில் வச்சி எழுதிட்டு ஒரிஜினலை தூக்கிப் போட்டுட்டாலும், இன்னொரு காப்பி அப்படியே இருக்குறது மாதிரி என்னதான் ஆன்லைன்ல ஹிஸ்டரியை டெலிட் பண்ணினாலும் அது முழுசும் அழிஞ்சுப் போகுறது இல்ல. ஸ்மார்ட்போன் பயனாளர்கள் ஒவ்வொருவரின் ஜாதகமும் கூகுள் போன்ற ஜாம்பவான்களின் சர்வரில் எப்போதும் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டே வருகிறது.

Google Voice Assistant

ஸ்மார்ட்போன்களில் சமீபமாக கூகுள் வாய்ஸ் ரெகக்னிஷன் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. “அட அந்த கருமத்தை யாரு மாப்ள உட்கார்ந்து டைப் பண்றது, வாய்ஸ்ல பேசினோம்னா அதுவே நமக்கு ட்ரான்ஸ்கிர்ப்ட் பண்ணி வந்திடும்” என பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். நண்பர்கள் தங்களுக்குள் பேசுவது, காதலர்கள் பேசுவது, அலுவலக உரையாடல்கள் என அனைவர் பேசுவதும் ரெக்கார்டாக கூகுளுக்கும் போவது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த வாய்ஸ் செயலியின் தரத்தை உயர்த்துவதற்காக, ரெக்கார்டாகும் மொத்த உரையாடல்களில் வெறும் 0.2% மட்டுமே தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதாக கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மிக சென்சிட்டிவான விஷயங்களை ஆன்லைனில் எடுத்துச் செல்வது நல்லதற்கல்ல!