டிஜிட்டல் இந்தியாவை நம்பும் பாஜக – முகநூலில் செய்த விளம்பரங்களுக்கு ஆன செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

 

டிஜிட்டல் இந்தியாவை நம்பும் பாஜக – முகநூலில் செய்த விளம்பரங்களுக்கு ஆன செலவு மட்டும்  எவ்வளவு தெரியுமா?

சமூக வலைதளமான முகநூலில் அரசியல் கட்சிகள் இதுவரை சுமார் ரூ.8 கோடி செலவிட்டு விளம்பரம் செய்துள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் 17 -ஆவது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்கும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

சமூக வலைதள யுகம் 

அனைத்து கட்சிகளும் கூட்டணி விபரங்களையும், வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்ட நிலையில் தற்போது தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. டிஜிட்டல் இந்தியாவில் எந்த ஒரு விஷயத்திலும் சமூக வலைத்தளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்திலும் காட்சிகள் சமூக வலைதள விளம்பரங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. 

பிஜேபி

இந்நிலையில், சமூக வலைதளமான முகநூலில் அரசியல் கட்சிகள் இதுவரை சுமார் ரூ.8 கோடி செலவிட்டு விளம்பரம் செய்துள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

8 கோடிக்கு முகநூலில் விளம்பரங்கள் 

இது தொடர்பாக, முகநூல் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு அளித்துள்ள அறிக்கையின் படி, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் 16 – ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் மொத்தமாக ரூ.6.88 கோடி செலவில் 34,048 விளம்பரங்களை முகநூலில் வெளியிட்டுள்ளன. 

மார்ச் 16 – 23 ஆம் தேதிக்குள்ளாக அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்ட விளம்பரங்களின் எண்ணிக்கை 41,514 ஆக அதிகரித்துள்ளது. அவற்றுக்கு செய்யப்பட்ட செலவும் ரூ.8.38 கோடியாக உயர்ந்துள்ளது. 

பாஜக

முதலிடம் பிடித்த பாஜக 

இந்நிலையில், முகநூலில் விளம்பரங்களுக்காக அதிகம் செலவு செய்துள்ள கட்சிகளில் பட்டியலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. 

  • அதிகபட்சமாக, ‘பாரத் கே மன் கீ பாத்’ என்ற முகநூல் பக்கத்தில் ரூ.2.23 கோடிக்கும் அதிகமாக சுமார் 3,700 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

 

  • பாஜக – வின் அதிகாரப்பூர்வ  முகநூல் பக்கத்தில் ரூ.7 லட்சம் செலவில் சுமார் 600 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

  • My First Vote for Modi , Nation with Namo போன்ற முகநூல் பக்கங்களிலும் விளம்பரங்களுக்காக அதிகம் செலவிடப்பட்டுள்ளன. 

 

  • பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் முகநூல் பக்கத்தில் ரூ.2.12 லட்சம் செலவில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

 

  • காங்கிரஸ் கட்சியின் முகநூல் பக்கத்தில் பிப்ரவரி முதல் மார்ச் 23-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.5.91 லட்சம் செலவில் 410 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

இதையும் படிங்க 

பாஜக-வின் தேர்தல் வியூகங்கள் – பெங்களூரு தொகுதியில் களமிறங்கும் இளம் நடிகை

இது அட்டகாசப் புலி, இது அட்ராக்ட் பண்ற புலி என டி.ஆர் பாணியில் மோடியைப் புகழ்ந்த அதிமுக அமைச்சர்