டிசைன் டிசைனா ஏமாறுறதுல நம்ம‌ கொங்கு ஏரியாவை அடிச்சுக்கவே முடியாது!

 

டிசைன் டிசைனா ஏமாறுறதுல நம்ம‌ கொங்கு ஏரியாவை அடிச்சுக்கவே முடியாது!

தானத்தில் சிறந்தது சிறுநீரக தானம், சும்மா தரவேணாங்க ஒரு சிறுநீரகத்துக்கு மூணு கோடி ரூவா, சும்மா இருக்குற ஒரு சிறுநீரகத்தை கொடுத்து மூணு கோடி ரூவாயும், கூடவே உயிரைக் காப்பாத்தின புண்ணியத்தையும் வாங்கிங்க, சீக்கிரம் வாங்க, இந்த வாய்ப்பு போனா வராது, உங்கள் சிறுநீரகத்தை தானம் செய்ய இன்றே முந்துங்கள்

“தானத்தில் சிறந்தது சிறுநீரக தானம், சும்மா தரவேணாங்க ஒரு சிறுநீரகத்துக்கு மூணு கோடி ரூவா, சும்மா இருக்குற ஒரு சிறுநீரகத்தை கொடுத்து மூணு கோடி ரூவாயும், கூடவே உயிரைக் காப்பாத்தின புண்ணியத்தையும் வாங்கிங்க, சீக்கிரம் வாங்க, இந்த வாய்ப்பு போனா வராது, உங்கள் சிறுநீரகத்தை தானம் செய்ய இன்றே முந்துங்கள்” இப்படி ஒரு விளம்பர வாசகம் ஈரோட்டில் இருக்கும் ஒரு பிரபல சிறுநீரக மருத்துவமனையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானால் என்ன செய்வீர்கள்? மூணு கோடி ரூவா தர்றதா இருந்தா, ஒண்ணு என்ன, ரெண்டையுமே எடுத்துக்கங்க என்றுதானே வரிசைகட்டுவோம்?

Scammers arrested

வரிசை கட்டுனா பரவாயில்ல, ஆனா தன் சிறுநீரகத்தைத் தானம் கொடுக்க 15,000 பதிவுகட்டணம் எல்லாம் ஆன்லைனில் கட்டிவிட்டு ஒரு பெண் நேராக அந்த மருத்துவமனைக்குச் சென்று, ‘டேக் மை 3 க்ரோர் ருப்பீஸ்’ என்று கேட்டிருக்கிறார். ஷாக்கான டாக்டர்கள், விஷயத்தை போலீசிடம் சொல்ல, அவர்கள் வந்து விசாரிக்கையில்தான் தெரியவருகிறது, பிரபலமான அந்த மருத்துவமனையில் பெயரில் போலியாக ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டிருப்பதும், அதில் சிறுநீரக தான விளம்பரம் வெளியாகி இருப்பதும், அதில் மயங்கிய‌ இந்தப்பெண் 15,000 ரூபாய் கட்டி ஏமாந்து இருப்பதும் தெரியவந்தது. விசாரணை முடிவில், ஈரோடு பக்கம் சுமார் 500 பேரிடமிருந்து பதிவுக்கட்டணம் 15,000 ஏமாற்றிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுல இன்னொரு கொடூரமான காமெடியும் உண்டு. இந்த கும்பலுக்கு தலைவர்கள் இரண்டு நைஜீரிய இளைஞர்களாம். அவர்களுக்கும் காப்பு போடப்பட்டு இருக்கிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏமாறுவதில் தமிழகத்துக்கு கொங்கு மண்டலம்தான் வழிகாட்டி என்பது மற்றுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.