டிசிஎஸ் நிறுவனத்தின் கோணல்கொண்ட பார்வை! லஷ்மிக்காக வாதாடப்போகும் பரத் யார்?

 

டிசிஎஸ் நிறுவனத்தின் கோணல்கொண்ட பார்வை! லஷ்மிக்காக வாதாடப்போகும் பரத் யார்?

இது எல்லாவற்றையும் புகாராக கமிட்டியிடம் அனுப்பினால், அவர்கள் புகாரை முறையாக விசாரிக்காமல், அப்ரைசலில் நல்ல க்ரேட் வாங்குவதற்காக வீண்பழி போடுகிறார் என ப்ளேட்டை மாற்றியிருக்கிறார்கள். விசாரணை கமிட்டியின் அறிக்கையை தள்ளுபடி செய்யவேண்டும், தன் புகார் முறையாக விசாரிக்கப்படவேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

நாட்டின் முதன்மை மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் மீது அக்கெம்பெனி பெண் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டு லண்டனில் ஆன்-சைட் பணியிலிருந்தபோது, அங்கே இருந்த மேலதிகாரி இவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாகவும், அவர்மீது அளிக்கப்பட்ட்ட புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட அலுவலக கமிட்டி பாரபட்சமாக நடந்துகொண்டு தன்மீதே குற்றச்சாட்டு கூறுவதாகவும், ஆதாரங்களை சமர்ப்பிக்க தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும் காஞ்சிபுரம் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்களின் பெயரையோ அடையாளத்தையோ வெளியிட முடியாது  என்பதால் இப்போதைக்கு அவரை லஷ்மி என வைத்துக்கொண்டு, ‘குற்றம்… நடந்தது என்ன’ என்பதை பார்ப்போம்.

Sexual harassment in TCS

டிசிஎஸ் நிறுவனத்தின் பாலிசிபடி, ஊழியர்களுக்கான அப்ரைசல் மீட்டிங் நடக்கும்போது, கம்பெனியின் மனிதவளத்துறை அதிகாரிகளில் ஒருவரும் உடன் இருக்கவேண்டும் என்பது விதி. ஆனால், லஷ்மியின் மேலதிகாரி அப்ரைசல் மீட்டிங்கிற்கு வரச் சொன்னபோது அவருடன் யாரும் இல்லை. இது முதல் ஆதாரம். மீட்டிங்கின்போது அதிகாரி லஷ்மியிடம் தகாத முறையில் நடந்துகொண்டபோது லஷ்மி மயக்கமாகியிருக்கிறார். உடனடியாக அலுவலகத்தினர் அவரை மீட்டு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் புகாராக கமிட்டியிடம் அனுப்பினால், அவர்கள் புகாரை முறையாக விசாரிக்காமல், அப்ரைசலில் நல்ல க்ரேட் வாங்குவதற்காக வீண்பழி போடுகிறார் என ப்ளேட்டை மாற்றியிருக்கிறார்கள். விசாரணை கமிட்டியின் அறிக்கையை தள்ளுபடி செய்யவேண்டும், தன் புகார் முறையாக விசாரிக்கப்படவேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். லஷ்மிக்காக வாதாடி நோ மீன்ஸ் நோ என நிரூபித்து ஜெயிக்க போகும் அந்த பரத் சுப்ரமணியம் யார்?