டிசம்பர் 26 ஆம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம்! அதிசயமா? ஆபத்தா?

டிசம்பர் 26 ஆம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம்! அதிசயமா? ஆபத்தா?

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும். அதன்படி இந்தாண்டுக்கான சூரிய கிரகணம் வரும் 26 ஆம் தேதி தோன்றவுள்ளது. 

கிரகணம் ஏற்படும்போது நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம்தான் வரும் 26 ஆம் தேதி நிகழவுள்ளது. அரிதான வானியல் நிகழ்வாக பார்க்கப்படும் இந்த கிரகணத்தை தமிழகத்திலும் பார்க்கலாம். 26 ஆம் தேதி காலை 8.07 மணி முதல் 11.18 மணி வரை, மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் தெரியும்.

solar eclipes

கிரகணம் ஏற்படும் போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல்போவதால் சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இந்தக் காட்சி தமிழகத்தில் திருச்சி, காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, பழநி, கரூர், ஈரோடு, கோவை மற்றும் உதகை ஆகிய பகுதிகளில் தெரியும். சென்னை, கன்னியாகுமாரி போன்ற பகுதிகளில் மங்கலாகவே தெரியும். உரிய பாதுகாப்பு கண்ணாடி அணிந்து, சூரிய கிரகணத்தை பார்க்கலாம் என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.