டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியாகும் !

 

டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியாகும் !

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

election

அதன் படி, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் படி தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது. 

election

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன. அதன் கூட்டணி காட்சிகளும் தேர்தலின் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன.

Supreme court

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் எழுந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அனைத்து தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். அதற்கு, மாநில தேர்தல் ஆணையம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலின் தேதி குறித்த அறிவிப்பாணை வெளியாகும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.